ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தளபதி விநாயகம்..

இந்தத் தலைப்பே இன்றைக்கு நடந்து வரும் (Twitter news) வரிகளுக்குப் பொருத்தமாக இருக்கக் கூடும். அறிஞர் அண்ணா, முதல்வராக இருந்த போது, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எதிர்க் கட்சித் தலைவர் திருத்தணி கே. விநாயகம். இவர் அண்ணாவின் கல்லூரி நண்பர். திருத்தணியை ஆந்திராவில் இருந்து பிரித்து, தமிழ் நாட்டில் சேர்த்ததால் தளபதி விநாயகம் எனப்பட்டார். அண்ணாவிற்கும் இவருக்கும் சட்ட மன்றத்தில் நடந்த ஒரு உரையாடல் இதோ.. "யாகவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு" -என்கிற திருக்குறள் யாருக்கு? என்று ஒரு வினா, விநாயகம் எழுப்பினார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றாக அண்ணாவை சிக்கலில் மாட்டிவிட்டார் விநாயகம் என்று தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். அந்தக் குறள் பேருந்து பணிபுரியும் ஊழியர்களுக்காகவே எழுப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால், பேருந்து ஊழியர்கள் வாய்ச்சொல்லில் அடக்கம் இல்லாதவர்கள் என்று அமைந்துவிடும். அந்தக் குறள் பேருந்து பயணம் செய்பவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால் பொது மக்களின் மனம் வருத்தப்படும். எனவே எப்படிப் பார்த்தாலும் நிலை சிக்கலாகவே இருப்பதால், அவர் எப்படி பதில் சொல்லப்போகிறாரோ என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணாவையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். அறிஞர் அண்ணாவோ எந்தவிதத் தயக்கமுமின்றி, எந்தவித சஞ்சலமுமின்றி மிகத் தெளிவாக யாருக்கெல்லாம் நாவு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காவும் தான் இந்தக் குறள் எழுதப்பட்டிருக்கிறது என்றார். Twitter News போன்று இனியும் எதிர்காலத்தில் நடைபெறா வண்ணம், பகுத்தறிவாளர்கள், இஸ்லாமியப் பெருமக்கள், கிறித்துவ நண்பர்கள், நடுநிலையாளர்கள் என்று அனைவரையும் காக்கும் வண்ணம் இருத்தல் நலம். அப்படித் தான் சொல்ல வேண்டுமாயின், தமிழ் நாட்டில் என்ன தமிழ்க் கடவுள்கள் இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக