இந்தத் தலைப்பே இன்றைக்கு நடந்து வரும் (Twitter news) வரிகளுக்குப் பொருத்தமாக இருக்கக் கூடும்.
அறிஞர் அண்ணா, முதல்வராக இருந்த போது, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எதிர்க் கட்சித் தலைவர் திருத்தணி கே. விநாயகம்.
இவர் அண்ணாவின் கல்லூரி நண்பர்.
திருத்தணியை ஆந்திராவில் இருந்து பிரித்து, தமிழ் நாட்டில் சேர்த்ததால் தளபதி விநாயகம் எனப்பட்டார்.
அண்ணாவிற்கும் இவருக்கும் சட்ட மன்றத்தில் நடந்த ஒரு உரையாடல் இதோ..
"யாகவராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
-என்கிற திருக்குறள் யாருக்கு? என்று ஒரு வினா, விநாயகம் எழுப்பினார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றாக அண்ணாவை சிக்கலில் மாட்டிவிட்டார் விநாயகம் என்று தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.
அந்தக் குறள் பேருந்து பணிபுரியும் ஊழியர்களுக்காகவே எழுப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால், பேருந்து ஊழியர்கள் வாய்ச்சொல்லில் அடக்கம் இல்லாதவர்கள் என்று அமைந்துவிடும். அந்தக் குறள் பேருந்து பயணம் செய்பவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று அண்ணா பதில் சொன்னால் பொது மக்களின் மனம் வருத்தப்படும்.
எனவே எப்படிப் பார்த்தாலும் நிலை சிக்கலாகவே இருப்பதால், அவர் எப்படி பதில் சொல்லப்போகிறாரோ என்று சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அண்ணாவையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
அறிஞர் அண்ணாவோ எந்தவிதத் தயக்கமுமின்றி, எந்தவித சஞ்சலமுமின்றி மிகத் தெளிவாக யாருக்கெல்லாம் நாவு இருக்கிறதோ அவர்கள் எல்லோருக்காவும் தான் இந்தக் குறள் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.
Twitter News போன்று இனியும் எதிர்காலத்தில் நடைபெறா வண்ணம், பகுத்தறிவாளர்கள், இஸ்லாமியப் பெருமக்கள், கிறித்துவ நண்பர்கள், நடுநிலையாளர்கள் என்று அனைவரையும் காக்கும் வண்ணம் இருத்தல் நலம்.
அப்படித் தான் சொல்ல வேண்டுமாயின், தமிழ் நாட்டில் என்ன தமிழ்க் கடவுள்கள் இல்லையா?
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014
தளபதி விநாயகம்..

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014
எகிப்தியப் பிரமிடுகள்..
இந்தப் பிரமிடுகள் என்பது தமிழின் வேர்ச்சொல் என்கின்றனர்.
பெரு + இடு என்பது பிரமிடு என்று வந்ததாம்.
இடுகாடு, சுடுகாடு என்று சொல்லில் இடுகாடு என்பது இறந்தவர்களைப் புதைக்கும் இடமாகவும், சுடுகாடு இறந்தவர்களைப் எரிக்கும் இடமாகவும் நம்மில் வழக்கத்தில் உள்ளது.
இதில் இடுகாடு என்பதில், நம்மைப் போன்ற சாதாரண மக்கள் இறந்தால் அவர்கள் இடுகாட்டிலும், மன்னர்கள் போன்ற உயர் குடும்பத்தினர் இறந்தால் அது பெரு இடு என்றும் சொல்லப் பட்டு வந்திருக்கிறது தமிழ் இலக்கியங்களில்.
இந்தப் பெரு இடு தான் பிரமிடு என்று எகிப்திய நாட்டில் மன்னர்கள் இறந்த இடத்தைக் குறிப்பிடுகின்றன.
எகிப்து நாட்டின் பிரமிடுகளைப் பார்க்கும் போது இது நினைவுக்கு வந்தது.
நம்பினால் நம்புங்கள்..

பெரியார் குடும்பக் கட்டுப்பாடு பற்றி
தந்தைப் பெரியார் ஒருமுறை, திண்டுக்கல் கூட்டத்தில் பேசும்போது, மேடையில் பேசத்தொடங்கு முன் குழந்தைகளைக் கொடுத்தால் இரண்டுரூபாய் அல்லது ஐந்துரூபாய் வாங்கிக்கொண்டு பெயர் வைப்பார். அன்று அப்படிக்கொண்டு வந்து கொடுத்த நண்பரின் குழந்தையை ஒரு சில நிமிடம் பார்த்துவிட்டு “சித்தார்த்தன் என்று பெயர் சூட்டுகிறேன்” என்றார் பெரியார்.
குழந்தையின் தந்தை பதற்றத்துடன் “அய்யா!.. அய்யா! இதற்கு முன்னர் பிறந்த என்பையனுக்கும் அதே பேர்தான் வச்சீங்க..இதற்கும் அதே பெயரா…” என்றார்.
“அப்படியா! என்ற பெரியார், அவரை உற்றுப்பார்த்தார். இஃது எத்தனாவது குழந்தை..” என்றார்.
தோழர் கூச்சத்தோடு நெளிந்துகொண்டே ‘இது நான்காவது’ என்றார். (குடும்பக்கட்டுப்பாடு என்ற கருத்துக்குத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கருத்தாவே பெரியார்தான். குடும்பக் கட்டுப்பாட்டை நாற்பத்து ஐந்து ஆண்டுகள் முன்னரே தொடங்கி இதை வலியுறுத்துபவர்) பெரியாருக்குக் கோபம் வந்துவிட்டது.
“போ..போ.. உனக்கெதுக்குக் கறுப்புச் சட்டை” என்று குழந்தையைத் திரும்பக் கொடுத்துவிட்டார். எல்லோரும் சமாதானம் செய்த பின்னர்ப் “பத்து ரூபாய் கொடு, உனக்கு இது அபராதம்” என்று சொல்லிப் பின்னர்க் காமராஜ் என்று பெயர் வைத்தார். இன்று தமிழ்நாட்டிலுள்ள பல காமராஜ்கள் பெரியாரால் பெயர் சூட்டப்பட்டவர்களே!
(திருச்சி செல்வேந்திரன் பதிவுகளில் இருந்து)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)